ஹபரனை காட்டுப்பகுதியினூடாக செல்லும் பிரதான வீதியில் வாகனம் ஒன்றின் இயந்திரம் சடுதியாக நின்ற நிலையில் அவ்வழியாக சென்ற யானை குறித்த வாகனத்தை தள்ளி இயங்க செய்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாகனத்தின் சாரதி வாகனத்தை இயக்க சிரமப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து வந்த யானையை பார்த்து வாகன சாரதி தள்ளுராஜா தள்ளு என சிங்களத்தில் சத்தம் போட்டவுடன் யானை துதிக்கையால் தள்ளியுள்ளது ஆனால் வாகனம் இயங்கவில்லை யானை முன்னோக்கி செல்ல சாரதி மீண்டும் தள்ளு தள்ளு என சிங்களத்தில் சொல்ல யானை மீண்டும் வந்து வாகனத்தை தள்ளி இயந்திரத்தை இயங்க உதவியுள்ளது.
இதனை அவ்வழியால் சென்றவர்கள் வியப்புடன் வாகனங்களை நிறுத்தி பார்வையிட்டதுடன் பலர் தமது செல்போன் கெமராக்கள் மூலம் படம் மற்றும் காணொளிகளாக பதிவு செய்துள்ளனர்.
நன்றி JVP News .