வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே அத தெரணவிற்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், விலை உயர்ந்த வாகனங்களை விற்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.