வவுனியாவில் மேலும் 101 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில், கோயில்புதுக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், வவுனியாவில் பணிபுரியும் மல்லாவியைச் சேர்ந்த ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், மகாகச்சகொடி பகுதியில் எட்டு பேருக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், குருக்கள்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் ஆறு பேருக்கும், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மணிபுரம் பகுதியில் ஒருவருக்கும், கப்பாச்சி பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், மணியர்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், குடாகச்சகொடி பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் நான்கு பேருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பூங்கா வீதி நகரசபை விடுதியில் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் பணிபுரியும் தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் ஆறு பேருக்கும், தேக்கவத்தை பகுதியில் ஒருவருக்கும், புதுவிளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், மகாமயிலங்குளம் பகுதியில் இருவருக்கும், அம்பலாங்கொட பகுதியில் மூன்று பேருக்கும், அலகல்ல பகுதியில் இருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இரண்டு பேருக்கும், கெப்பற்றிக்கொலாவ பகுதியில் ஒருவருக்கும், டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் இருவருக்கும், மதவுவைத்தகுளம் பகுதியில் ஒருவருக்கும், மூன்று முறிப்பு பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தைப் பகுதியில் ஒருவருக்கும், கந்தசாமி கோவில் வீதியில் ஒருவருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும், புதியகோவில்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், பூவரசன்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், கைதராமணி ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் மூன்று பேருக்கும், மெனிகபாம் பகுதியில் ஒருவருக்கும், சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 101 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.