வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20-06-2023) மாலை பூந்தோட்டம் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமது வீடுநோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவியை வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இருப்பினும், குறித்த பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய நபர் மதுபோதையில் இருந்தாரா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.