வவுனியாவில் 8 மணி நேரத்தில் ஆயிரம் கோவிட் தடுப்பூசிகளும் இன்று வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்புடன்,
வவுனியா நகரம், வவுனியா நகரின் வடக்கு, இறம்பைக்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்ற வருகை தந்தமையால் 8 மணிநேரத்தில் ஆயிரம் பேர் தடுப்பூசிகளை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றியிருந்தனர்.
இதன் மூலம் முதற்கட்டமாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 1000 தடுப்பூசிகளும் தீர்ந்து போயின. அடுத்து வரும் வாரமளவில் தடுப்பூசிகள் ஏற்றும் பணி மீள இடம்பெறவுள்ளது.