வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் எம்.பி தெரிவித்தார் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்திற்கு 1000 தடுப்பூசிகள் தான் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, வடமாகாணத்தில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாவட்டமான வவுனியாவிற்கு அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை தாருங்கள் என்று என்னால் கேட்கப்பட்டது.இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி 26ம் திகதி எமது நாட்டுக்கு வர இருக்கின்ற தடுப்பூசிகளில் 80 ஆயிரம் தடுப்பூசிகளை தருவதாக உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி 26ம் திகதி எமது நாட்டுக்கு வர இருக்கின்ற தடுப்பூசிகளில் 80 ஆயிரம் தடுப்பூசிகளை தருவதாக உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.