வவுனியா, பூம்புகார் – கல்மடுப் பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் , பல மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன.
மாடுகள் நேற்று மாலை நீர் அருந்துவதற்காக சென்றுள்ளன. அவை நீர் அருந்தி சிறிது நேரத்தில் மாடுகள் சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளன.
சுமார் 15 மாடுகள் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சில மாடுகள் உயிருக்குப் போராடி வருவதுடன் சில மாடுகள் காணாமல்போயுமுள்ளன.
இந்நிலையில் பதறியடித்த மாடுகளின் உரிமையாளர் சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை மாடுகள் அருந்திய நீரில் விசம் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளா நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.