இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை வருட இறுதிப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆசிரியர்கள் குழுவொன்று முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருட இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெறுகின்றன.
அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான தேர்வு இன்று நடத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 இன் விஞ்ஞானம் முதலாம் வினாத்தாள் மற்றும் தரம் 11 தொடர்பான விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட வினாத்தாள்களை இன்று மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது