இலங்கை மத்திய வங்கி இந்த முறையும் வட்டி வீதங்களை மாறா நிலையில் பேணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் துணைநில் வைப்பு வட்டி வீதம் 8.5 சதவீதமாகவும், துணைநில் கடன் வட்டி வீதம் 9.5 சதவீதமாகவும் நிலவுகிறது.
நாட்டின் நாணயச் சந்தையின் ஸ்திரத்தன்மையைக் கருதி வட்டி வீதத்தை மாற்றாமல் பேணுவதற்குத் தீர்மானிக்கப்படலாம் என்றும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பணவீக்கம் மே மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூன் மாதம் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 மே மாதம் 1.6 சதவீதமாக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மே 2024 இல் 0.5 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மே 2024 இல் 2.4 சதவீதமாக இருந்து ஜூன் 2024 இல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.