இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் 52 பேர் 2023ல் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தில் 129 பேர் கைதாகியுள்ளனர்.
இதனடிப்படையில், யாழில் 14 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 44 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறையில் 05 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 05 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மன்னாரில் 04 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 11 பேர் கைதாகியுள்ளதுடன் 06 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் 08 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 17 பேர் கைதாகியுள்ளதுடன் 04 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் 08 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைதாகியுள்ளதுடன் 07 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் 13 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 37 பேர் கைதாகியுள்ளதுடன் 05 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.