ஈழ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களது பிரச்சினைகள் என்பது, உள்ளார்ந்த குறைபாடுகளால் எழுந்தவை. அவை அவதானத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த பிரச்சினைகளின் ஆரம்ப புள்ளிகள் தொடர்பாக இன்னும் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அகழ்வு பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும், இந்தியாவில் இருந்து இலங்கை மின்சாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தால் பாரிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சீனாவுடனான உறவை மதிக்கும் அதேவேளை, ஆனால் இந்தியா உடனான உறவின் அளவுக்கு விஷ்தீரமானது இல்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.