வடக்குப் பிரதேசத்தில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்டேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பின்போது இன்று (26.12.2026) குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவ்வருடம் நவீன மயப்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வடக்கு விவசாயிகளுக்காக எடுத்துவரப்பட்ட சுமார் 21000 கிலோ உருளைக் கிழங்கு பயன்படுத்த முடியாத நிலையில் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின் போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.