அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை கொள்ளையிடன் வந்த சம்பவம், வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தடுக்கப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) காலை அநுராதபுரம் பொது வர்த்தக நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள அரசாங்க வங்கி ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியை அகற்றி வங்கிக்குள் புகுந்து பெட்டகத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல கொள்ளையர்கள் முற்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களின் முயற்சி சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிக் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து ஒருவர் அல்லது பலர் கயிற்றின் உதவியுடன் கீழே இறங்கி பெட்டகத்தை உடைத்தபோது வங்கியின் சமிக்ஞை கட்டைப்பு திடீரென செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் உடைக்கப்பட்ட பெட்டகத்தில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.