நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணத்தை செலுத்துவதற்கு தாமதமடைந்தமையினால் சுமார் 7 நாட்கள் குறித்த கப்பல் இலங்கை கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த கப்பலுக்கு எஞ்சிய 2.5 மில்லியன் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்போது 3,900 மெட்ரிக் டன் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது. அவற்றை இன்று முதல் தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இவ்வாறான பின்னணியில் எரிவாயுவுக்கான காத்திருப்பு தொடர்கிறது.