பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேல்ஸ் எனும் பகுதியில் மலைமீது அமைந்துள்ளது அற்புதமான வேல்முருகன் ஆலயம்.
இந்த ஆலயத்தை இலங்கையிலிருந்து ஒரு சிங்கள இன முருக பக்தரால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளைக்காரர்களே பூஜை செய்யப்பட்டு வருகின்றது.
மலையின் நடுப்பகுதியில் ஶ்ரீஷண்முகர் சன்னதி. அதற்கு சற்றுமேலே சென்றால் காளிசன்னதி, சற்று கீழே வந்தால் அரங்கநாதர் சன்னதி உள்ளது.
மேலும், வரவேற்று உபசரித்து நல்லமுறையில் தரிசனம் செய்ய உதவினார்கள். வேல்ஸ் சிவஶ்ரீ லம்போதரகுருக்கள் உடனிருந்து இக்கோயிலின் 50 வருட வரலாறுகளை விளக்கியுள்ளதாக அங்கு சென்ற மயிலாடுதுறை சிவபுரம் கல்வி அறக்கட்டளை சேர்ந்தவர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.