ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர்.
தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் எண்ணெயை மட்டுமே பாதிக்கும். ஆனால் குழாய் எண்ணெய் அல்ல.
ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்த ஒப்பந்தம் ரஷ்ய போர் இயந்திரத்திற்கான பெரும் நிதி ஆதாரத்தை துண்டித்துவிட்டது என கூறினார்.
இது பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகும், இதில் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ரஷ்யா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் 27 சதவீதம் மற்றும் அதன் எரிவாயுவில் 40 சதவீதம் வழங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு வருடத்திற்கு சுமார் 400 பில்லியன் டொலர்கள் செலுத்துகிறது.