ஒரு வாடிக்கையாளர் ரூ.6 லட்சம் செலவு செய்து இட்லி வாங்கியுள்ளதாக ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.
ரூ.6 லட்சம் கொடுத்து இட்லி வாங்கிய நபர்
நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதன்படி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 3.3 கோடி இட்லிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 6 லட்சம் ரூபாய்க்கு இட்லி வாங்கி இருக்கிறார்.
சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலேயே இட்லி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3.3 கோடி பிளேட் இட்லி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் 10 மணி வரையில் அதிகளவில் இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு நேரம் என்பதால் அதிக இட்லி இந்நேரத்தில்தான் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் நெய் இட்லி, நெய் காரப்பொடி இட்லி ஆகியவை விற்பனையாகி இருக்கிறது. பெங்களூருவில் ரவா இட்லி அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது மட்டுமல்லாமல், தட்டு இட்லி, மினி இட்லி ஆகியவையும் எல்லா பகுதிகளில் விற்பனையாகியுள்ளது. இவ்வாறு ஸ்விக்கி நிறுனம் தகவல் தெரிவித்துள்ளது.