மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்க போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த விரிசல்கள் மறையும். சுய தொழிலில் தன லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத தர்ம சங்கடங்கள் உருவாக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் பண ரீதியான விஷயத்தில் சிக்கனம் மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுமையை இழக்காமல் இருப்பது உத்தமம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சவால் நிறைந்த வேலைகளையும் சுலபமாக எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவி வழி நற்செய்திகள் கிடைக்க இருக்கிறது. சுய தொழிலில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணியது ஈடேறும் நல்ல நாளாக இருக்கிறது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பால் உயரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களில் இருந்து தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அந்தஸ்த்து உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஒரு விஷயத்திற்கு ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகார ரீதியான முயற்சிகள் வெற்றிகளை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளை பெற வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு வருங்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுப காரியங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடைய கூடும். புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் உதிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். திடீர் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தி அடைய கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. குடும்ப செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்ட காரியங்கள் துலங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் விரிசல் மேலும் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த ஒப்பந்தங்கள் கைகூடி வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வந்து மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பல வேலைகளை இழுத்து போட்டு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிடங்களில் முக்கிய ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைந்து திரிய வேண்டிய அமைப்பாக இருக்கிறது. முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம் ஆகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார அந்தஸ்து உயரும்.