மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துவங்கக்கூடிய அற்புதமான நாளாகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த நெருடல் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதை எடுத்தாலும் அதில் வெற்றி காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுப செலவுகள் அதிகரிக்கலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் லாபம் பெருக புதுப்புது யுக்திகளை கையாளுவது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்கவலைகள் தீர கூடிய அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நஷ்டம் வரலாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பதில் சங்கடங்கள் வரலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் சிந்தித்து செயல்படுவது உசிதமானது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வம்பு, வழக்குகள் தேவையில்லாமல் வரக்கூடும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எதை எடுத்தாலும் அதில் லாபத்தை காணக் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தேவையற்ற விமர்சனங்களை புறக்கணிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு விருத்தி உண்டாக கூடுதல் பொறுப்பு தேவை. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் ஜெயம் காண்பீர்கள். குடும்பத்தில் பேச்சில் நிதானம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்புகளை சந்திப்பீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக இருப்பதால் எதிலும் பொறுப்புடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே விரிசல் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு. சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை கேட்கலாம். சுய தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றில் சாதகப் பலன்கள் உண்டாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய மனதை கட்டுப்படுத்துவது நல்லது. மனம் தேவை இல்லாமல் அலை பாய்வதை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ள நீங்கள் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது போல பொறுமையாக இருந்தால் வெற்றி கிட்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சி நல்ல லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாகாமல் ஆற போடுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்