மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நட்பு வளரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுமையை படைக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை எதிலும் ஓங்கி இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரித்து காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் நீங்கள் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் வெற்றி அடையக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சகோதரர்கள் வழியில் ஆதாயம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி குவிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக அமையப் பெற்றிருக்கிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதம் ஆக முடியும்.
கன்னி:
கண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய பெற்றிருக்கிறது. வேகத்தை விட விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடன் தேவையற்ற வாய் சண்டை வரக்கூடும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் பணி சுமை ஏற்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அறியாமையில் சில இணைப்புகளை சந்திக்க வாய்ப்பு உண்டு எனவே ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழுப்பறியில் இருந்த வேலையும் எதிர்பாராமல் முடிய கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில தந்திரங்களை கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நீங்கள் புது அத்தியாயத்தை துவங்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கடந்தது கடந்ததாகவே எண்ணிக் கொண்டு செயல்படுவது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சனைகளும் முடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப பொறுப்புகளை சரிவர செய்து முடிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அறிமுகத்தால் அனுபவமான பலன்கள் வர வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. பழைய பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய சிறப்பான அமைப்பாக இருக்கிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் விளைவு உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சினை வரலாம், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் அலைச்சலை தவிர்க்க திட்டமிடுதல் நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பை அதிகமாக கொடுக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது எனவே சோம்பேறித்தனம் படாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பகைகள் வளர வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும்.