மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் பலிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சரியான முடிவு எடுக்க அவசரப்படாமல் சிந்திப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்த முடிவுகளில் இருந்து தயங்காமல் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சு வார்த்தையில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பாராத முக்கிய விஷயங்கள் நடக்கலாம். விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கப் போகிறது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகோதர, சகோதரிகளுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கோபம் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மறையாக இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதிப்பது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத ஏமாற்றத்தை சந்திக்கலாம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயல்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் காத்திருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சி செய்வீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத வகையில் வெற்றிகளை காண வாய்ப்புகள் உண்டு. தொடர் முயற்சிக்கு சிறந்த பலன்களை பெறுவீர்கள். சுபகாரிய தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நண்பர்கள் மூலம் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த நல்ல நாளாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே கூடுதல் முயற்சி தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே விரிசல் விழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் வம்பு வழக்குகள் வரலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது நினைத்தபடி நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய லாபம் காண்பதற்கு மற்றவர்களை மட்டும் தட்டி பேச வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வகையிலும் குறுக்கு வழியை கையாளக்கூடாது இது ஆபத்தை கொடுக்கும்.