மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அசதி ஏற்படும். சுய தொலைதால் ஏற்படக்கூடிய லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியான போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். புதிய பகைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற சினம் வரும், கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கொதிப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு காணக்கூடிய அமைப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் உண்டாக கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய விடாமுயற்சியை விட்டு விடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற பிரச்சனைகளை மறப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வளரும் வாய்ப்பு உண்டு. வெளியிட பயணங்களில் பொழுது வேகத்தை தவிர்க்க வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அனவசியமான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையேயும் இன்சொல்லால் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அனுமதிப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது எதிர்பார்த்தபடி நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவருக்கும் தேவையில்லாமல் வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பாராட்டுக்கள் பெரும் வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பேராசை பெருநஷ்டமாக வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பக்தியில் ஈர்ப்பு உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்பம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நாங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வேலை வாய்ப்பு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதக பலன் கிட்டும். ஆரோக்கிய அக்கறை தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகள் நீங்கி வெற்றி காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனநிறைவு தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாந்தத்துடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சில பழைய நினைவுகள் உங்களை வாட்டி வதைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறு சிறு ஊடல்கள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். சுபயோக முயற்சிகளில் இருந்து வந்து தடைகள் அகலும்.