மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை. ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வாங்கிய கடனை வட்டியுடன் திரும்ப செலுத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் தைரியம் கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும், பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும், பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வருவார்கள். பெண்கள் மூலமாக குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிலருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்றாலும் அதை சமாளித்து விடுவார்கள். சிலருக்கு உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் கனவுகள் நிறைவேறும். புதிய மனிதர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு பணவரவுகளில் இழுபறி நிலை இருக்கும். பணியிடங்களில் உங்களின் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவாலான காரியங்களை செய்து பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலர் ஞாபக மறதியால் பொருட்களை தவற விட நேரலாம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சுமாரான நாளாகவே இருக்கும். உடலிலும், மனதிலும் சோம்பல் தன்மை இருக்கும். ஒரு சிலருக்கு பெண்கள் வகையில் வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருந்தால் மட்டுமே சிறக்க முடியும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புத்துணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். உடல் மற்றும் மனம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.
தனுசு:
தனுசு ராசிக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். உறவினர்கள் அல்லது நண்பர்களால் பணவரவு இருக்கும். பணியிடங்களில் உங்களுக்கான மரியாதை பெருகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் புகழ் மற்றும் கௌரவம் கூடும். உங்களுக்கு வரவேண்டிய பணத்தொகை சரியாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்கின்ற வாய்ப்பு அமையும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சிறிது அலைச்சலுக்கு பிறகு ஆதாயம் கிடைக்கும். பணிச்சுமையால் சிலர் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் பொறுமை அவசியம். பிறருடன் விவாதங்களை தவிர்க்க வேண்டும். சிலர் பண தட்டுப்பாட்டால் எதிலும் போராட வேண்டிய நிலை இருக்கும். சிலருக்கு உறவினர்களுடன் பகைமை ஏற்படலாம்