மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பிரியமானவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பூர்வீக சொத்து ரீதியான பிரச்சினைகளில் சாதக பலன் கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான வேலையும் கடினமாக இருக்கும் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் விரயங்களை பெருக்கிக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியம் சிதறாது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு பிரச்சனையையும் புன்முறுவலுடன் கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அசட்டு தைரியத்துடன் இருக்க வேண்டாம். எதிரிகளின் தொல்லை வலுவாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற டென்ஷன் காணப்படும். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைபட்ட காரியங்கள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. நடக்குமா? நடக்காதா? என்று நினைத்த காரியம் ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு உரிய செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணியது ஈடேறும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் வீணாகாது. செய்யும் விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து நிற்கும் துணிச்சல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகனம் சார்ந்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று நடக்கப் போகிறது. விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடி வர வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீடு தேடி நல்ல செய்திகள் கிடைக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் இழுபறியாக இருக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களுடைய கருத்துக்கு கொஞ்சம் செவி சாய்ப்பது நல்லது. உடல் நலனில் எச்சரிக்கை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் எதிர்பார்ப்பதை விட மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க போகிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரக்கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விடாப்பிடியாக எந்த ஒரு விஷயத்தையும் கையாளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய விருப்பம் போல் செயல்படுவீர்கள். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்க மாட்டீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அடிக்கடி நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு சுத்தம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்ப பிரச்சினைகள் சரியாகி உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.