மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்று சந்திராஷ்டமம் தினம் என்பதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பிறரின் பழிக்கு ஆளாக நேரும். சிலருக்கு தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் சுமாராக நடைபெறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்த சிலருக்கு உறவினர்களால் லாபம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். சிலருக்கு வேலை இடத்தில் பணிச்சுமை கூடும். பணவரவு தாராளமாக இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு பிறரின் ஆலோசனைப்படி செயல்படுவதால் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு சிலர் வாங்கிய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வெளியூர்களில் இருந்து நல்ல செய்தி வரும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்த்த கடன் சற்று இழுபறிக்கு பிறகு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் பிறருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வெளியூர் வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டிருக்கும். நேரடி, மறைமுக எதிரிகளால் சில தொந்தரவுகள் ஏற்படும். பணம் தொடர்பான விடயங்களில் கவனம் தேவை. பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்கள குடும்பத்திற்கு தேவையானதை வாங்குவீர்கள். இது வாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மீனம்:
தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் சராசரியான வருமானமே கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி பெறும்.