மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெடுநாள் வராத பணமும் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கி மகிழ்ச்சி நிறைந்து இருக்க கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் முனைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய உழைப்பை அதிகரிப்பது நல்லது. ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் உங்களுடைய முயற்சியில் இருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனநிலையில் ஏற்ற இறக்கம் காண வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் உடனே அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான வேலையும் கடினமாக முடியக்கூடும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மை தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே பொறுமை தேவை, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடப்பதில் காலதாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொல்லைகள் படிப்படியாக குறையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் சாதகமான பலன்களை கொடுக்கும். எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து, வெற்றி நடை போடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை தவறும் யுக்திகளை கற்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தடைகளை தாண்டிய முன்னேற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமைகிறது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூடுதல் அனுசரனையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எங்கும் எதிலும் நிதானத்தை கைவிடாமல் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான போட்டிகள் வலுவாகும் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் தேவையற்ற அலட்சியத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் அனுகூலமான பலன்கள் கிட்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறையில் இருந்த வேலை முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான முயற்சிகள் வெற்றி பலன்களை கொடுக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விட்டு சென்ற உறவுகள் உங்களை தேடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்ய நினைப்பதை துணிச்சலுடன் செய்து காட்டுவீர்கள். மறைமுக எதிரிகள் தொல்லை வலுவாகும் கவனம் வேண்டும்