மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் யாவும் சுப பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அறிவை பூர்வமாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அமைதியான நாளாக இருக்கப் போகிறது. யார் என்ன சொன்னாலும் அதை காட்டில் போட்டுக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முடிவுகள் எடுக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதை பிறக்கக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அவ்வபொழுது சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புது விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்ள முனைவீர்கள், மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு எதையும் சாதிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்கள் விருப்பம் போல் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். உங்களுக்கு பக்க பலமாக குடும்பத்தினரின் ஆதரவும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் அதிக லாபம் காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் தவிர்ப்பது நல்லதாகும். எதையும் ஒரு முறை நிதானத்துடன் யோசித்து முடிவெடுங்கள். சில உணர்ச்சி பூர்வமான தருணங்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முதல் முயற்சி தோல்வியுற்றாலும் சில விஷயங்களில் அடுத்த கட்ட ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு விவாதம் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் உங்களை வருத்தப்பட வைக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை தவற விட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வசூல் மந்தமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமாக உழைக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே பொறுப்புடன் இருப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. புதிய நபர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். உங்கள் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் உயரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாக கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. சகோதரர்களுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கவலைகள் மறந்து நிம்மதி ஏற்படக்கூடிய இனிய நாளாக இருக்கிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே தேவையற்ற முன் யோசனைகளை தவிர்ப்பது நல்லது. இழுப்பறியான சில விஷயங்கள் கூட சட்டுன்னு முடிய கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நாளாகும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு பல விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களை சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவர்கள்? யார் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்? என்பதை இனம் கண்டு கொள்வீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள் தேவைப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப விஷயங்களில் சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய நினைவுகளை ஆசை போட்டு பார்க்கக்கூடிய இனிய வாய்ப்புகள் உண்டு. விட்டு சென்ற உறவுகள் மீண்டும் உங்களை தேடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சவால்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். உங்களுடைய பேச்சில் கம்பீரம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சொத்து பிரச்சனையில் இருந்து முடிவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை. ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.