மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியப்படுத்தாமல் கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சினத்தை தவிர்ப்பது நல்லது. பொறுமையுடன் இருந்தால் வெற்றிகள் உங்கள் பக்கம் திரும்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்பட, வருமானம் பெருக கூடுதல் உழைப்பு தேவை. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நடைபெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை மறதி ஏற்படலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக பொறுமையை கடைப்பிடித்து, முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குழப்பம் நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகளும் நற்பலன்களை அடையும். எதிலும் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் உண்டாக கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுக்கள் புதிய கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அழையா விருந்தாளிகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தெளிவு இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடல் சோர்வு காணப்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்தமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் உங்களுடைய ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் காணக்கூடிய யோகம் உண்டு. எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் உயரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர ஒற்றுமை வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய விடாமுயற்சியை கைவிடாமல் இருப்பது நல்லது. வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழியை உடைத்து விடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சோதனைகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன ரீதியான உளைச்சல் அதிகரிக்கும் என்பதால் எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் போராடி தான் பெற வேண்டி இருக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.