மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு வேலையும் தடை இன்றி முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனி போராட்டம் முடிவுக்கு வரும். தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் வாக்குவாதங்களை தவிருங்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளை எளிதாக முறியடிப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கப் போகிறது. சுப காரிய முயற்சிகளில் இருந்து மந்த நிலை மாறும். கணவன் மனைவி இடையே விரிசல் எழாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு உற்றார், உறவினர்களின் பங்களிப்பு இருக்கும். தடைகளை தாண்டிய வெற்றி அடையக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இழுப்படியாக இருந்த வேலையும் சுலபமாக முடியும். உடல் நலன் தேறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தைரியத்துடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கிறது. உங்களை எதிர்த்தவர்கள் பின்வாங்குவார்கள். கணவன் மனைவி இடையே வார்த்தையில் கட்டுப்பாடு தேவை. சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தனைகள் ஆழமாக காணப்படும். எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மட்டும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நாளாக அமைந்துள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் வேண்டாம் அல்லது வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இனம் புரியா அன்பு மலரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில விஷயங்கள் தடைகளை சந்திக்கலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு. மறைமுக விமர்சனங்கள் உங்களை தொய்வு நிலைக்கு கொண்டு செல்லலாம் எனினும் உற்சாகத்துடன் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருங்கிய நண்பர்களால் மன சங்கடங்கள் வந்து மறையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய அனுபவங்கள் கிடைக்க கூடிய இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப சூழ்நிலையை அறிந்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சகோதரர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அவசரமாக வாங்கி இருந்த பணம் திரும்ப கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் ஏற்றம் காணலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய முயற்சிகளில் தொடர் தடைகள் ஏற்படலாம் எனவே இதனை ஒத்திவைப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்கும் யோகம் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்க போகிறது. எடுத்த முயற்சிகளில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய சுய சிந்தனையால் புதிய மாற்றத்தை காண போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். தேவையற்ற வேலைகளை இழுத்து போட்டுக் கொள்ளாதீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வலி காரியங்கள் அனுகூல பயன்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில புதுமைகளை செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.