மேஷம்:
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிர்பாராத முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுயதொழில் செய்பவர்கள் வெளியிடங்களில் புதிய நட்பு வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும். சுய தொழில் செய்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எத்தகைய சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். முன் பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று வரவை காட்டிலும் செலவை அதிகம் எதிர்கொள்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சரிவை சந்திக்கலாம் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இழுபறியாக இருக்கும் வேலைகளையும் சட்டுனு முடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவியிடையே போராட்டமாக இருக்கும், விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் பழைய கடனை தீர்ப்பதற்கான முயற்சிகளில் பின் தங்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று அலைந்து திரிந்து சில விஷயங்களை முடிக்க வேண்டி வரும். சுலபமான வேலையும் கடினமாக இருக்கும். குடும்பத்தில் புதிய விஷயங்களைப் பற்றிய பேச்சு வார்த்தை நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் நயமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைசல் இருந்தாலும் ஆதாயம் காணக்கூடிய அற்புத பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று உங்கள் கண் முன் நடக்கும் பிரச்சனைகளை வேடிக்கை பார்க்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே உங்களுடைய மதிப்பு உயரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு மீறிய அதிர்ஷ்ட பலன்களை காணப் போகிறீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று உடன் பிறந்தவர்களால் ஆதாயம் காணக்கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும். சுய சிந்தனை அனுகூல பலன்கள் கொடுக்கும் என்பதால் அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டாம். உடல்நலம் தேரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த விஷயம் வந்து சேர காலதாமதம் ஆகலாம். குடும்பத்தில் இருந்து வந்த ஒற்றுமையில் விரிசல் வர வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து மறையும்.
தனுசு:
தனுசில் பிறந்த நீங்கள் இன்று காரியத்தை சாதிப்பதில் காரியக்காரர்களாக இருக்கப் போகிறீர்கள். பேராசையால் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க வேண்டாம் வழக்கு தொடர்பான விஷயத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடுங்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே வெறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புது அத்தியாயம் துவங்க வாய்ப்புகள் உண்டு. இடமாற்றம் குறித்த விஷயத்தில் சாதக பலன் கிட்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று அசதியுடன் காணப்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த நீங்காத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகம் இருந்தாலும் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம் உடனுக்குடன் கவனியுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. முன்கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் நிதானத்தை கையாளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டது தொடங்கக்கூடிய நாளாக இருப்பதால் நீங்கள் உங்களுடைய திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்கள் தேடிச்சென்று உங்களுடைய உதவிகளை மற்றவர்களுக்கு புரிவீர்கள். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.