மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளை காப்பாற்றும் என்னும் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பொருட் சேர்க்கை ஏற்படலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை வலுவாக வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்க முடிவுகள் சாதக பலன் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொல்லை கொடுத்து வரும் எதிரிகளின் சூழ்ச்சிகள் எளிதாக முறியடிக்கப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் நீங்கள் டென்ஷன் உடன் காணப்படலாம். சுய தொழிலில் நீண்ட நாள் காத்திருந்த நல்ல விஷயம் ஒன்று நடக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை எனவே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனையை அலைபாயவிடாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நாணயம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கு வழியில் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முக்கிய முடிவுகளுக்கு மற்றவர்களின் ஆதரவை எளிதாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகளை தாண்டிய துணிச்சல் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு திருஷ்டிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே அவ்வபோது அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்புகள் உண்டு. மனதை அலைபாய விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்ததை வாங்க கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை மற்றவர்களிடம் திணிக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் வர வேண்டிய லாபம் கிடைக்க இருக்கிறது. பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும் என்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். உடல் நல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்கான விடை கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களின் பொழுது விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன பயம் நீங்க கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை நுணுக்கங்கள் வாய்ப்புகள் உண்டு. வரவுக்கு மீறிய செலவு ஏற்படலாம், ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.