மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஒருவிதமான புத்துணர்ச்சியும், தெம்பும் பிறக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதை விரைவாக செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடியதாக அமையப் போகிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விமர்சனங்கள் எழக்கூடும் எனவே மனதை தளர விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதையும் தைரியமாக செய்யக்கூடிய ஆற்றல் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் பிடிவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை பக்தி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி குறைவு ஏற்படலாம் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொது விஷயங்களில் நாட்டம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் பிடிவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய முன் கோபம் சில இழப்புகளை ஏற்படுத்தக் கூடும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பொருளாதாரம் முன்னேற்றம் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய வைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்களில் பங்கு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிலர் தேவையற்ற கசப்பான விஷயங்களை உங்களுக்கு கொடுக்கலாம். எதையும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. சுப காரிய தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் கிட்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தவறவிட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் கவலை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக செய்து முடிக்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரச்சனைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களை சுற்றி இருந்தவர்கள் உங்களை உதாசீனப்படுத்த கூடும் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு காரிய தடை விலகி தொட்டதெல்லாம் வெற்றியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்டமிட்டு செயல்படுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வம்பு, வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். சுப காரியங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று சுலபமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.