மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் முக்கியமான விஷயங்களில் பொறுமையாக எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுப விரயங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தைரியம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமை இருந்தாலும் மற்றவர்களின் விமர்சனம் உளைச்சலை ஏற்படுத்தும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்துடன் வெளியிடங்களில் விருந்துக்கு செல்ல வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்ப்பாலினத்தால் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு ஏற்ப செலவுகளும் வந்து சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு நன்மைகளை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொந்த பந்தங்களுடைய ஆதரவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்வரும் எவ்வளவு பிரச்சினைகளையும் துணிச்சலாக சமாளிப்பீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த பணி ரீதியான பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறையும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெளியிட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும். பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும் வண்ணம் அமைப்பு உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலை இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அன்பை சிலர் உதாசீனப்படுத்த வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் எனவே கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பல தரப்பட்ட மனிதர்கள் மூலம் பல தரப்பட்ட விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எப்போதும் உங்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகப் போகிறது. எதையும் பலமுறை யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியை காணக் கூடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாமர்த்தியமான பேச்சாற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்து வந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் உங்கள் திறமையை நிரூபிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினால் நிம்மதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உடைய விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில்லரை சண்டைகள் வரக்கூடும் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கசப்பான விஷயங்கள் கூட இனிப்பாக மாறக்கூடும் எனவே அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உண்மைகளை உரக்க சொல்ல கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வம்பு வழக்குகளை இழுத்துக் கொள்ளாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வழக்கு தொடர்பானவற்றில் சாதக தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் திட்டமிட்டு எந்த ஒரு விஷயத்தையும் செய்யுங்கள்.