மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது நல்லது. உங்களுடைய கனிவான பேச்சாற்றல் மற்றவர்களை எளிதாகக் கவரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் புதிய பொறுப்பு கூடும். ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் சில இடையூறுகளை சந்திக்க கூடும் எனவே பொறுமை காப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். எதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகளை பெற போகிறீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகளை கேட்கலாம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை எதிர்க்க வேண்டி வரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளுக்கு அங்கீகாரங்கள் கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும், வீண் செலவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் குறையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நடக்காது என்று நினைத்த காரியம் கூட நடந்து ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே புதிய பொறுப்புகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது நிறைவேறும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது முக்கியமாக இருக்கக் கூடும். கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இன்சொல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்க போகிறது. வெளியிடங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விருத்தி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சினம் தவிர்ப்பது நல்லது. அனாவசிய வம்பு வழக்குகள் வந்து சேரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகும். எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு தான் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதனை படைக்க கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உழைப்பை கொடுத்து வெற்றி அடைவீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். எதிர்வரும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் துணிச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். சாதகமான சூழ்நிலை காரணமாக எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். குடும்ப பிரச்சனைகளை பொறுமையாக கையாள முயற்ச்சி செய்வீர்கள்.சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியான தருணங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கேட்டது கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்க போகிறது. கணவன் மனைவி இடையே உள்ள அன்பு வெளியில் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரிகள் வாடிக்கையளர்களின் நம்பிக்கையை வளர்த்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய சவால் கிடைக்க போகிறது. ஆரோக்கியம் மேம்படும்.