மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம் எனவே மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் மூலம் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூல பலன் கிட்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் சாதிக்கக் கூடிய வாய்ப்புகள் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் பேச்சு வார்த்தைகளை தள்ளி போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அநாவசிய வெளியிட பயணங்கள் ஆபத்தை கொடுக்கலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் குறைய கூடும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். பயணங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே புரிதலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏறுமுகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சுப பேச்சு வார்த்தைகள் நடக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை நிலைமை வந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாமர்த்தியமான பேச்சால் எதையும் சாதித்து காட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் கருத்து வேற்றுமை நிலவலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரம் பயணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையப்போகிறது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் எனவே வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விலகி சென்ற உறவுகள் தானாகவே வந்து சேரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பகைவர்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும் எனவே பொறுமையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலர ஆரம்பிக்கும். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனைகளையும் ஊதி பெரிதாகாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெற்றோர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த பணம் திருப்பி கிடைத்ததில் இடையூறுகள் நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய விஷயங்களை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற ஈகோவை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதையும் பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிருங்கள். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வம்பு வழக்குகள் வரக்கூடும் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு சீராக இருக்கும். யாருக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு முன்கூட்டியே திட்டமிடுங்கள். ஆரோக்கியா ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நீங்கள் அனுசரணையாக இருப்பது நல்லது. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடம்பில் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரிகள் உள்ளவர்களுக்கும் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் செலுத்துங்கள், சில பொருள் இழப்புகள் ஏற்படக்கூடும்.