மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான முடிவுகள் எடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி பெருகும். சுய தொழிலில் இழுபறியாக இருந்த பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறுதியான எண்ணங்கள் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணங்களை நேர்மறையாக வைத்திருப்பது நல்லது. மனம் அலை பாய்வதை கட்டுப்படுத்துங்கள். சுய தொழிலில் எதிர்பாராத நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை, மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் நிறைவேறுவதற்கான நல்ல அமைப்பாக இருக்கிறது. தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். சுய தொழிலில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பெரிய தொகையை முதலீடு செய்யும் முன்பு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. துணிச்சல் உடன் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் பங்குதாரர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும். முன்பின் யோசிக்காமல் வார்த்தைகளை விடாதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பகை எண்ணிக்கை குறையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனம் புரியாத மனக் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் நபர்களின் விஷயத்தில் அதிக ஆர்வம் செலுத்தாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புகளை சரியாக செய்து பாராட்டுக்கள் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதாரம் மேம்படுவதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கும் நல்ல நாளாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப விஷயங்களில் அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொருளாதார ஏற்ற இறக்கத்தை திறம்பட சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மெல்ல மறையும். புதிய பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற இடங்களுக்கு அலையாதீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியான நல்ல நாளாக அமையப் போகிறது. எதிலும் தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. உடன் இருப்பவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெற்றோர்களுடைய ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் கை கொடுக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிராளியாக நினைக்கும் நபர் உங்களுக்கு நன்மைகளை செய்யக்கூடியவராக இருக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களை திறமையை நிரூபிக்க அயராது உழைப்பீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய சிந்தனை அதிகரித்து காணப்படும். சமூக அக்கறை மேம்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் வலுவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். முன்கூட்டியே திட்டமிட்டு எதிலும் செயல்படுவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் அமையும். தேவையற்ற விஷயங்களில் நீங்களாகவே சென்று மூக்கை நுழைக்க வேண்டாம். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். தேவையான இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது நம்பிக்கை துளிர்விடும்.