மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விருப்பமான விஷயங்களை வாங்கி மகிழ கூடிய வாய்ப்பு உண்டு. தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுயமாக புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலும் வங்கி காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் திருப்தியாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீர்ப்புகள் சாதகமாக வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பொது வாழ்க்கையில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத வரவுகளை சேமிப்பாக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த காரியத்தை எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகை விலகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பிரச்சனைகளை அனுபவ ரீதியாக எதிர்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை தெளிவாக்கி கொள்வீர்கள். வீண்பழி மறையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நல் லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிக்கனம் தேவை, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய சிந்தனைகள் வரவேற்கப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. பேச்சில் அனுபவ அறிவை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொன், பொருள் சேரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தான்தோன்றி தனமாக செயல்படாமல் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத செலவுகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இல்லாத புதிய நம்பிக்கை மலரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் தடைகளை தாண்டிய முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களிடமிருந்து புதிய அனுபவங்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமமான வேலையை கூட சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செல்வாக்கு உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்கள் பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். சிலர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க போராடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புது நட்பு வளரக்கூடிய வாய்ப்பு உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாற்றங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் மெல்ல மறையும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத நஷ்டம் வர வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாவர்.