மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப செலவுகளை திறம்பட சமாளிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை, அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்க கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உத்வேகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய பலவீனத்தை காண்பிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதை நிறுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சாதகமற்ற அமைப்பு என்பதால் வெளியிட பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கைவிட்டு போன சில விஷயங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தது பூர்த்தியடையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பழைய பாக்கிகள் வசூல் ஆகும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் எதிர்பாராத நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் குதூகலம் காணப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். இறை வழிபாடுகளில் நாட்டம் செலுத்துவீர்கள். இடையில் நின்ற வீட்டுப் பணிகள் நடைபெறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேலை ஆட்கள் மீது அதிருப்தி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் வம்பு, வழக்குகள் வரக்கூடும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பழைய சிக்கல்கள் முடிவுக்கு வரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்தபடி நிறைவேறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பகைமை உண்டாக சாத்தியக்கூறு இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கும் நேரமாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள், எதிர்பாராத விரயங்கள் வரக்கூடும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சியை மாற்றிக் கொள்ளுங்கள். கடமைக்கு என்று எதையும் செய்யாமல் பொறுப்புடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.