மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கும் மீறிய செலவுகள் வரும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பகைவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எதையும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. சுப முயற்சிகளில் வீண் விரயங்கள் ஏற்படலாம். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்க போகிறது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்க காலதாமதம் ஆகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்க போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்கட்டுப்பாடு தேவை. அனாவசிய வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்க புதிய யுக்தி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுபட்ட பிரச்சனைகள் வரக்கூடும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கிறது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய அனுபவங்களை பெறுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பர செலவுகள் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுப காரியங்களில் விரயங்கள் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகஸ்தர்கள் நினைத்ததை முடிப்பீர்கள்.
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். கணவன் மனைவி இடையே எதிர்பார்த்த உரிமைகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் உழைப்பிற்கு ஏற்ற புதிய பாதைகளை காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கசப்பான நிகழ்வுகள் சில நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டியது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உணர்ச்சிவச படாதீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமையை சிலர் சோதிக்க வாய்ப்புகள் உண்டு. திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க புதிய பாதையை தேர்ந்தெடுப்பது நல்லது. புது முதலீடுகள் செய்வதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் உண்டு.