மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கற்பனைகள் புதுவிதமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. உங்கள் திறமைக்கு ஏற்ற விமர்சனங்களை அங்கீகரியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணி சார்ந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே மன கசப்புகள் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற ஆசைகள் எழக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நெருக்கடிகளை திறம்பட சமாளிப்பீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் துறை சார் நிபுணர்களை சந்திப்பீர்கள். அரசு வழி காரியத்தில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். முன்பின் தெரியாதவர்களிடம் எல்லாவற்றையும் ஒப்பிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுபவபூர்வமான நிகழ்வுகள் நடக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. கடமைகளிலிருந்து பின் வாங்காமல் இருப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது யோசித்து கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மந்த நிலையில் இருப்பீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களின் பழக்கத்தால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நம்பிக்கை நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பது நன்மை தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுகமான விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நபர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி நிறைந்து காணப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் புழங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவி உறவுக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயலில் நிதானம் தேவை. எடுக்கும் முடிவுகளில் குழப்பம் வேண்டாம். பெற்றோர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் விரயங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. நீங்கள் ஒன்று பேச போய் அது வேறு விதமாக செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பு அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சினைகள் தீரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. மறைமுக எதிரிகளை துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். சுய லாபம் காண சுயநலத்தை கையாளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்