மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனோ தைரியம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வீண் கவலைகளை உதறித் தள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டது துலங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமூக அக்கறை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத செலவுகள் வர வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்த்து, அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வழக்கமான பணிகளில் தொய்வு காணப்படும். சுய தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணவரவு தடை இல்லாமல் கிடைக்கும் நல்ல நாளாக இருக்கிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் செலவை கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதம் ஆகலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் போகிறது. தேவையற்ற விமர்சனங்களை ஒதுக்கி தள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பொருளாதார ஏற்ற இறக்கம் காரணமாக சிக்கனம் கடைபிடிப்பது உத்தமம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறைவழிபாட்டில் அதிகம் ஆர்வம் செலுத்தக்கூடிய நாளாக இருக்கப்போகிறது. குடும்ப ஒற்றுமையில் மற்றவர்களின் தலையீடு வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டாமல் பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பரபரப்புடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தடுமாற்றம் ஏற்படலாம் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளித்து விடக்கூடிய துணிச்சல் நிறைந்த நாளாக இருக்கிறது. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் திக்கு முக்காட செய்யும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய அமைப்பாக இருக்கிறது. வெளியில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அனாவசியமான வாக்குறுதிகளை எவருக்கும் கொடுக்காதீர்கள். சுய தொழிலில் லாபம் காண புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடற் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகள் எடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். குடும்ப ரகசியங்களை வெளியிடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பண வரவு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு உணவு கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தொடங்கியதை வெற்றியாக முடிப்பீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரின் ஆதரவை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உற்றார் உறவினர்களால் சிறு சங்கடங்கள் வந்து மறையலாம். சுய முயற்சியில் தொடங்கிய காரியங்கள் வெற்றி அடையலாம். தொழில் விருத்தி ஏற்படும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.