மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இனம் புரியாத அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற சினம் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்களால் ஆதாயம் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில எதிர்பாராத தொல்லைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதனை படைக்க கூடிய அமைப்பாக இருக்கிறது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெளிவான மனநிலை இருக்கும். இதுவரை உங்களை சுற்றி இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத படபடப்பு ஏற்படும். ஆக்கத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத லாபம் காணக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வரலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பால் உயரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களால் சில மன சங்கடங்கள் வரலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகை மறையக்கூடிய வாய்ப்பு உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் பெருகும் .உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபச் செய்திகள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதிக்கு பஞ்சம் இருக்காது. சுயதொழிலில் உள்ளவர்களுக்கு வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் காலதாமதமாக வாய்ப்புகள் உண்டு என்பதால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் பலம் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடக் கூடிய நன்மை தரும் அமைப்பாக இருக்கிறது. சமுதாய அக்கறை அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பம் தீரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஊக்கம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த பாலம் உடையாமல் பாதுகாப்பது உங்கள் கடமையாக கருதுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உழைப்பால் உயரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற பகைகளை வீணாக வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படலாம் இதனால் இழப்புகள் உண்டாகும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும்.