மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். குடும்ப உறவுகளுக்கு இடையே அதிகம் பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது, வாக்கு கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைய திட்டமிட்டு செயல்படும் காரியங்கள் வெற்றி அடையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் தொடர்பான விஷயங்களை கவனம் தேவை. கணவன் மனைவியிடையே வெறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் செலவிட கூடிய நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த இனிய நாளாக இருக்கும். உங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விடுபட்ட பணிகளையும் சேர்த்து முடிக்க வேண்டி இருக்கும் இதனால் வேலை வரும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேசிய நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை வெளியிடங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள். சுப விரயங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நம்பிக்கை அதிகரித்து காணப்படும். நினைத்த விஷயங்களில் இருந்து நல்லண்ணவற்றை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரம் புரிபவர்கள் தேவையற்ற மூன்றாம் நபர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களுடைய ஆதரவு கிடைக்கும் இனிய நாளாக இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களை தொந்தரவு செய்பவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவிலக்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுங்கள். அவசர வாக்குகள் வெளியிடங்களில் கொடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. பொறுப்புகளை தட்டி கழிக்க வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செயல்களில் மற்றவர்களுடைய பங்களிப்பு அதிகம் இருக்கும். பழைய நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை தாண்டி மற்றவர்களிடம் அனுசரணையோடு பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண அலைச்சல் ஏற்படலாம் எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுதல் நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் பிரச்சனை பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சுபகாரிய தடைகள் உலகம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். சமூகத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதமாக வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு தேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும், ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.