வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. நவகிரகங்களில் ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார்.ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது ஒருவரது வாழ்க்கையில் திடீர் மற்றும் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும்.
தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 31 ஆம் திகதி ராகு நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். இந்த ராகுவின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
யோகத்தைப் பெறப்போகும் ராசிகள்
மேஷம்: ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக நீண்ட காலமாக தடைபட்டு வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களும் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். மேலும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். நீண்ட நாட்களாக சிக்கியிருக்கும் பணம் ராகுவின் அருளால் கைக்கு வந்து சேரும்
மிதுனம்: ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வீரமும், செல்வாக்கும் அதிகரிக்கும். பேச்சாலும், புத்திசாலித்தனத்தாலும் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் எதிரிகளை தோற்கடித்து வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது. முக்கியமாக உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
கும்பம்: ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் செய்தால் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறலாம்.

