இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் உதவி நிலைய அதிபர்கள் இருவரையும், புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ரயிலில் பயணித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மேலும் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.