கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியுள்ளது.
கொழும்பு நோக்கித் திரும்பும் வழியில் புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடையில் புலிச்சகுளத்தில் ரயிலை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.