ரயில் ஒன்றில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ரொசெல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த மூவரும் ரயில் வரும் வேளையில் ரயில் கடவையில் கடக்க முயற்சித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.