ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று காவல்துறை கான்ஸ்டபிள்கள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ரம்புக்கனையில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் காவல்துறைமா அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்
இதற்கிடையில், ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.