நோய் நிலமைக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (21) இரவு 10 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவரிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும், ஹேன்ட் பிரீ ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மூவரடங்கிய நீதிபதிகள் முன் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.