வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விக்ஷ்ணு ஆலயங்களுள் வல்லிபுர ஆழ்வார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வடமராட்சியில் அமைந்துள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் 2023 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம் நேற்றையதினம் (14) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 8. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறவுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய உற்சவத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி வெண்ணைத் திருவிழாவும், 23ஆம் திகதி துகில் திருவிழாவும், 24ஆம் திகதி பாம்புத் திருவிழாவும், 25ஆம் திகதி கம்சன் போர்த் திருவிழாவும் இடம்பெறும்.
அத்துடன் , 26 ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 27ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 28ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30ஆம் திகதி கேணித்தீர்த்தமும் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது. இந்நிலையில் வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.